பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ‘ரூ.960 கோடி’ டெபாசிட்; அதிர்ந்து போன வங்கி அதிகாரிகள்!

 

பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ‘ரூ.960 கோடி’ டெபாசிட்; அதிர்ந்து போன வங்கி அதிகாரிகள்!

பீகாரில் பள்ளி இரண்டு பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

பீகார் மாநிலம் கஹிகார் மாவட்டம் பாத்தியா கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் குருச்சந்திர விஸ்வாஸ் மற்றும் ஆஷித் குமார். இவர்கள் இருவரும் தங்களது பள்ளியில் இருந்து வங்கி கணக்கில் செலுத்தப்படும் சீருடை மற்றும் பள்ளி கட்டணத்திற்கான உதவித்தொகை வந்து விட்டதா என்பதை பார்க்க உத்தர் பிஹார் கிராமின் வங்கிக்கு சென்றுள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ‘ரூ.960 கோடி’ டெபாசிட்; அதிர்ந்து போன வங்கி அதிகாரிகள்!

அவர்களது பரிவர்த்தனையை சோதித்து பார்க்கையில் ஆஷித் குமாரின் கணக்கில் 900 கோடியும் குரு சந்திர விஸ்வாஸ் கணக்கில் 60 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. குழப்பத்துடன் வீடு திரும்பிய மாணவர்கள் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த கிராம மக்கள் பலரும் ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று தங்களது கணக்கில் ஏதேனும் தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சோதித்துள்ளனர். இதனிடையே, வங்கி மேலாளர் மாணவர்கள் பணத்தை எடுக்காத வண்ணம் கணக்குகளை முடக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா, மாணவர்களின் கணக்குகளில் இவ்வளவு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வங்கிக் கணினி செயல்பாட்டால் மாணவர்களின் கணக்கில் இவ்வளவு பணம் இருப்பதாக காட்டுகிறதே தவிர உண்மையில் மாணவர்களின் கணக்கில் அந்த தொகை இல்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிஹாரில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. கக்காரியா மாவட்டத்திலுள்ள பக்தியாபூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் ஜாஸ் என்பவரது கணக்கில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.