96 ரீமேக் பற்றி பரவிய செய்திகள் பொய்: இயக்குனர் பிரேம் விளக்கம்

 

96 ரீமேக் பற்றி பரவிய செய்திகள் பொய்: இயக்குனர் பிரேம் விளக்கம்

96 ரீமேக் பற்றி பரவிய சில தகவல்கள் பொய் என அதன் இயக்குனர் பிரேம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: 96 ரீமேக் பற்றி பரவிய சில தகவல்கள் பொய் என அதன் இயக்குனர் பிரேம் விளக்கம் அளித்துள்ளார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 96. இதன் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரேம் குமார்தான் இதையும் இயக்குகிறார். இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கில் தமிழில் இடம்பெற்ற பள்ளிப் பருவ காதல் காட்சிகள் இல்லை என செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்து பிரேம் குமார், 96 தெலுங்கு ரீமேக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிப் பருவ காதல் இதிலும் உண்டு. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.