96 ரீமேக் : தியேட்டர் வாசலில் கதறி அழுத ரசிகர்…வைரல் வீடியோ!

 

96 ரீமேக் : தியேட்டர் வாசலில் கதறி அழுத ரசிகர்…வைரல் வீடியோ!

மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில்  கடந்த 2018 ஆம் ஆண்டின்  இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 


 

பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் திரிஷா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவுபடுத்தியிருப்பார்கள்.  மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

ttn

இந்நிலையில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும்  நடிகை சமந்தா இப்படத்திற்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் கண்கலங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

அதில், ‘என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு காதல் இருந்தது, நான் ஏற்கனவே இந்த படத்தை தமிழில் பார்த்துருக்கேன். இந்த முறை தெலுங்கில் பார்த்தபோது வசனங்கள் புரிந்தது. சமந்தா த்ரிஷா அளவுக்கு நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார். எனக்கும் காதல் தோல்வி இருந்தது அதனால் நான் அழவில்லை. இந்த படம் உண்மையான காதலை சொல்கிறது’ என்று கண்கலங்குகிறார்.  இதை கண்ட சிலர் ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது என்று வழக்கம் போல கிண்டலடித்து வருகிறார்கள்.