96 ரீமேக்: கல்லூரி காதலில் சமந்தா

 

96 ரீமேக்: கல்லூரி காதலில் சமந்தா

சமந்தா ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சமந்தா  ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 96. காதலை மய்யமாக கொண்ட இத்திரைப்படத்தில் திரிஷாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தை சமந்தா ஏற்று நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். 

96 படத்தில் வரும் பள்ளிப் பருவ காதல் காட்சிகள் இதில் இல்லை. அதற்கு பதிலாக கல்லூரி காதல் காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. ஷ்ரவந்தும் சமந்தாவுமே இந்த கதாபாத்திங்களில் நடிக்கவுள்ளனர். பிரேம் குமார்தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.