96 ரீமேக் இசையமைப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

 

96 ரீமேக் இசையமைப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில்  கடந்த 2018 ஆம் ஆண்டின்  இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் திரிஷா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவுபடுத்தியிருப்பார்கள். 

 

 மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.  இந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா சமீபத்தில் தெலுங்கில் வெளியான 96 ரீமேக் படமான ஜானுவிற்கும்   இசையமைத்திருந்தார். 

ttn

இருப்பினும் கன்னடத்தில் வெளியான 96 ரீமேக் படத்திற்கு அர்ஜூன் ஜான்யா இசையமைத்திருந்தார். அது அவருக்கு 100வது படமாகும். இந்நிலையில் அர்ஜூன் ஜார்ன்யாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அவர் தற்போது  மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.