‘96’ ரிலீசுக்காக சம்பளத்தை தூக்கிக் கொடுத்த விஜய் சேதுபதி!

 

‘96’ ரிலீசுக்காக சம்பளத்தை தூக்கிக் கொடுத்த விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து , தனது மொத்த சம்பளத்தையும் ரிலீஸுக்காக கொடுத்துள்ளார்.

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து , தனது மொத்த சம்பளத்தையும் ரிலீஸுக்காக கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் சில தயாரிப்பாளர்கள் கடைசி நேர சிக்கலை சந்திக்கின்றனர். நிதி பிரச்னை காரணமாக திரைப்படங்களை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.

96

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள ’96’ திரைப்படத்தின் அதிகாலை முதல் ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு கே.டி.எம் லைசன்ஸ் வழங்கப்படாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ரூ.4 கோடியை செட்டில் செய்ய வேண்டும் என பைனான்சியர் நெருக்கடி கொடுத்ததால் உரிய நேரத்தில் கே.டி.எம் லைசன்ஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த விஜய் சேதுபதி, சிக்கல் இல்லாமல் ‘96’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ரூ.4 கோடியை தனது சொந்த பணத்தில் இருந்து எடுத்துக் கொடுத்துள்ளார். இப்படத்துக்காக விஜய் சேதுபதி வாங்கிய ரூ.3 கோடியுடன் சேர்த்து சொந்தமாக ரூ.1 கோடி தந்து தயாரிப்பாளருக்கு தக்க நேரத்தில் உதவியுள்ளார்.

96

விஜய் சேதுபதியின் இந்த செயலை சினிமா வாட்டாரத்தில் இருப்பவர்கள் புகழ்ந்து வருகின்றனர். மெட்ராஸ் எண்டர்ப்ரைஸஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் ப்ரஸ் ஷோவில் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது நிதி சிக்கல் தீர்ந்து வழக்கமான 9 மணி ஷோ திரையிடப்பட்டது.