96 மேஜிக்: த்ரிஷாவை பாராட்டிய சமந்தா

 

96 மேஜிக்: த்ரிஷாவை பாராட்டிய சமந்தா

த்ரிஷா நடித்துள்ள 96 படத்தைப் பார்த்துவிட்டு நடிகை சமந்தா, த்ரிஷாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சென்னை:  த்ரிஷா நடித்துள்ள 96 படத்தைப் பார்த்துவிட்டு நடிகை சமந்தா, த்ரிஷாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 96.  இப்படத்தில் த்ரிஷா ஒரு புதிய பரிமாணத்தில் தோன்றியிருந்தார். இப்படத்தைப் பலரும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிவரும் நிலையில் நடிகை சமந்தாவும் இதுகுறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ’96 படம் பார்த்தேன். என்ன ஓர் அற்புதமான நடிப்பு. நீங்கள் இதில் எப்படி நடித்துள்ளீர்கள் என என்னால் எப்படித் துவங்கி விவரிப்பது எனத் தெரியவில்லை. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.