96 பட ஹீரோவுக்கு திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி!

 

96 பட ஹீரோவுக்கு திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி!

96 படத்தின் ஹீரோவிற்கு திடீரென்று விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை: 96 படத்தின் ஹீரோவிற்கு திடீரென்று விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பள்ளி பருவ காதலை மையப்படுத்தி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த படம் தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. 

இதில் தெலுங்கு ரீமேக் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு நடிகர் சர்வானந்த் நடிக்க திரிஷா கதாபாத்திரத்திற்கு நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் நாயகன் தாய்லாந்தில் ஸ்கை டிவைங் செய்து கொண்டிருந்த வேலையில் திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. 

sha

அதில் அவருக்குக் கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவரை  மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்பு அவர் இன்னும் இரண்டு மாதங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் 96 தெலுங்கு ரீமேக் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பின்னரே தொடங்கும் என்று கூறப்படுகிறது.