96 பட புகழ் ராம் வீட்டில் விரைவில் டும் டும் டும்!

 

96 பட புகழ் ராம் வீட்டில் விரைவில் டும் டும் டும்!

96 பட புகழ் ஆதித்யா பாஸ்கர் சகோதரி ஐஸ்வர்யாவிற்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  

சென்னை: 96 பட புகழ் ஆதித்யா பாஸ்கர் சகோதரி ஐஸ்வர்யாவிற்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  

தமிழில் பல்வேறு படங்களில் நடித்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்க்கு ஐஸ்வர்யா பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆதித்யா பாஸ்கர் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் ராம் என்ற வேடத்தில் நடத்துத்திருந்தார். தான் நடித்த முதல் படத்திலே தனது முழு திறமையையும் நிரூபித்து அனைவரது மனதிலும்  இடம் பிடித்தார். 

இந்த நிலையில் தற்போது இவரின் சகோதரி ஐஸ்வர்யாவிற்கும், அகுல் என்பவருக்கும் சென்னையில் நேற்று(13-06-2019) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ms

இதில் எம்.எஸ்.பாஸ்கரின் நெருங்கிய நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் இவர்களின் திருமணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது