96 பட இயக்குநருக்கு விஜய் சேதுபதி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா?

 

96 பட இயக்குநருக்கு விஜய் சேதுபதி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி 96 பட இயக்குநர் பிரேமுக்கு பரிசு ஒன்று கொடுத்துள்ளார்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி 96 பட இயக்குநர் பிரேமுக்கு பரிசு ஒன்று கொடுத்துள்ளார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி வெளியான திரைப்படம் ‘96’. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வெற்றியை பெற்றது. பிரேம்குமார் இயக்கிய இப்படம், பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர்.

prem

இந்நிலையில், 96 திரைப்படம் வெற்றியானதையடுத்து அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமாருக்கு நடிகர் விஜய்சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதிவுஎண்ணும் வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.