’96’ படத்தை பார்த்திருந்தால் இளையராஜா வாழ்த்திருப்பார்: பிரபல இயக்குநர் ட்வீட்!?

 

’96’ படத்தை பார்த்திருந்தால் இளையராஜா வாழ்த்திருப்பார்: பிரபல இயக்குநர் ட்வீட்!?

’96’ திரைப்படம் பார்த்திருந்தால் இளையராஜா நிச்சயம் வாழ்த்திருப்பார் என்று இயக்குநர்  சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

’96’ திரைப்படம் பார்த்திருந்தால் இளையராஜா நிச்சயம் வாழ்த்திருப்பார் என்று இயக்குநர்  சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

ilaiayaraja

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களைக் கச்சேரிகளில், மேடைகளில் பாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும், நிகழ்ச்சியின் அளவு, பாடகர்களின் பட்டியலைப் பொருத்து ரூ.30,000 முதல் ரூ.20 லட்சம்  வரை ராயல்டி தொகை வசூலிக்கப்படும் என அறிவித்தார்.

96

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இளையராஜாவின் ராயல்டி தொடர்பான பிரச்னை தொடர்ந்து திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவிடம் 96 திரைப்படத்தில் அவரின் பாடல்கள் இடம்பெற்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு , ’80களில், 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க வேண்டியதுதானே? இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத தனம்’  என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

 

இளையராஜாவின் இந்த பேச்சுக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர்  சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘80,90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது.தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது 96 movie  படத்தை அவர் பார்த்திருந்தால்  வாழ்த்திருப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.