’96’ குட்டி ஜானுக்கு அடித்த ஜாக்பாட்: எப்படி தெரியுமா?

 

’96’ குட்டி ஜானுக்கு அடித்த ஜாக்பாட்: எப்படி தெரியுமா?

’96’ திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்த கவுரி கிஷான் அடுத்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

சென்னை: ’96’ திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்த கவுரி கிஷான் அடுத்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளிப்பருவத்தில் அரும்பிய காதலையும், 22 ஆண்டு கழித்து அதன் நினைவுகளையும் உணரும் காதல் கதையாக ’96’ திரைப்படம் உருவாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். அந்த வகையில் குட்டி த்ரிஷாவாக நடித்த கவுரி கிஷானுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அடுத்ததாக மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

gouri

பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக கவுரி நடிக்கிறார். இது பற்றி கூறியுள்ள அவர், ’96 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் கதைகளை கவனமாக தேர்வு செய்கிறேன். இந்த படமும் 96 படம் போல நமது வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.