‘96’ இல்ல; ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு லவ் ஸ்டோரி..!

 

‘96’ இல்ல; ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு லவ் ஸ்டோரி..!

விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கிற்கு ‘99’ என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை: விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கிற்கு ‘99’ என பெயரிடப்பட்டுள்ளது.

பிரேம்குமார் இயக்கிய ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானது. காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’ படத்தின் ராம், ஜானு கதாபாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.

99movie

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் இதன் ரீமேக் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார். இதில் த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் நடிக்கவிருக்கும் நாயகியை படக்குழு தீவிரமாக தேடி வருகின்றனர்.