ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

 

ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

’பிக்பாஸ் இந்த சீசன் நல்லாத்தானே இருக்கு… ஏன் எப்ப பார்த்தாலும் போர் அடிக்குது போர் அடிக்குதுனு எழுதறீங்க’ என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் நேற்றைய எப்பிசோட்டைப் பார்த்தால் ஏன் அப்படி எழுதறேன்னு புரிந்துகொள்வார்கள். இதுவரை கொடுத்த டாஸ்க்குகள் ஒன்று ஆடியன்ஸ்க்கு ஜாலியாக இருக்கும்; இல்லை, போட்டியாளருக்கு ஜாலியாக இருக்கும். அல்லது இருதரப்புக்கும் ஜாலியாக இருக்கும். ஆனால், நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க் இரு தரப்புக்குமே செம போர். அப்படி என்னதான் கொடுத்தாங்க. கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 95-ம் நாள்

ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

வேக்கப் ஸாங் முடிந்து உற்சாகமாக டாஸ்க்குக்காக காத்திருந்தார்கள். அதேபோல எனர்ஜிமிக்க ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். அதாவது ஒரு வட்டத்திற்குள் சுமார் 10 பத்து பந்துகள் இருக்கும். படுத்துக்கொண்டு அந்தப் பந்தை எடுத்து, உருண்டுக்கொண்டே சென்று மறுபுறம் உள்ள வட்டத்திற்குள் வைக்க வேண்டும். பத்து பந்துகளையும் அப்படியே வைத்ததும், திரும்பவும் அங்கிருந்து பழைய வட்டத்திற்கே அதேபோல உருண்டு கொண்டுவர வேண்டும்.

இந்த டாஸ்க் உடல் உறுதிமிக்கவர்கள் வெல்லும் டாஸ்க். அதனால் பாலா, ஆரி இருவரின் ஒருவர் நம்பர் 1 இடத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நடந்ததே வேறு. முதல் சுற்றிலேயே ரம்யா தோற்று கடைசி இடத்திற்கு வந்தார். அடுத்து ரியோ, ஆரி, பாலா, ஷிவானி என வரிசையாக வெளியேறினார்கள்.

ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

ஆரி இருமுறை போட்டியிட்டு இருமுறையும் தோற்றார். ஒருமுறை ரியோவோடு, இன்னொரு முறை பாலாவோடு. அதிக பணம் சம்பாதித்ததற்கு ஒரு பவராக, பாலா தன்னோடு போட்டியிட யார் என்பதை அவரே முடிவு செய்யலாம் என்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஈஸி டார்க்கெட்டாக இருப்பார் என நினைத்து கேபியை அழைக்க, செம டஃப் கொடுத்து அந்தச் சுற்றில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

1, 2 இடத்திற்கு கேபி மற்றும் சோம் போட்டியிட்டார்கள். அதில் இருவரும் ஒரே நேரத்தில் போட்டியை முடித்தார்கள். அதை ரியோ சொன்னபோது மற்றவர்கள் முகத்தில் இது உண்மையா… பொய்யா என்றிருந்தது. ஆனால், கேபி அல்லது சோம் இருவரில் யார் ஜெயித்தால் நமக்கு ஒன்றுமில்லை என்பதால் அமைதியாகி விட்டார்கள். ஒருவேளை ஆரி, பாலா, ஷிவானி என யாராவது அந்த இடத்தில் இருந்தால் சண்டை வந்திருக்கும். குறைந்தபட்சம் வாக்குவாதமாவது வந்திருக்கும்.

ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

அதனால் மீண்டும் இருவருக்கும் இன்னொரு சுற்று வைத்தது அநியாயம். ஏற்கெனவே கேபி மூன்று சுற்றுகள் மோதியிருந்தார். அந்த அடிப்படையிலாவது அவரை வெல்ல வைத்திருக்கலாம். மீண்டும் வைக்கப்பட்ட சுற்றில் சோம் வென்றார். அதனால் அவர் நம்பர் 1, கேபி நம்பர் 2. போற போக்கைப் பார்த்தால் சோம் ஃபினாலே டிக்கெட்டை வென்று விடுவார் போலிருக்கே.

அடுத்து ஒரு விளம்பர தார நிகழ்ச்சி. இந்த வீட்டில் யாருடன் ஏற்பட்ட அனுபவம் இனிமையாக இருந்தது என்று சொல்ல வேண்டும். மறுபடியும் பழைய விஷயங்களை நோண்டி எடுத்து பேசினார்கள். ஓ! சரி… சரி… அடுத்த டாஸ்க்கைக் கொடுங்க என்ற நம் பேச்சு பிக்கிக்கு கேட்டுவிட்டது போல. அடுத்த டாஸ்க் கொடுத்தார். அதுதான் கொடுமை.

ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

ஆத்திச்சூடி, திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்து ஒவ்வொரு வரியைக் கொடுத்து அதற்குப் பொருத்தமான ஆளைத் தேர்வு செய்ய சொன்னார்கள். அப்போது பிக்பாஸ் வீட்டில் இரவு நேரம் வேறு. ஏற்கெனவே பலமுறை கேட்ட / பார்த்த விஷயங்களையே திரும்ப திரும்ப பேசி சலிப்பை ஏற்படுத்தினார்கள். எல்லோருக்கும் ஒரு வரி போல என நினைத்தால் அனுமார் வால் போல நீண்டுகொண்டே போனது. ஏற்கெனவே சொன்ன செய்திகளைச் சொன்னால்கூட பரவாயில்லை. அப்போது சில நிமிடங்களுக்கு முன் சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். முடியல. எப்பதான் இது எண்ட் கார்டு போடுவீங்கன்னு கடுப்பில் இருந்தார்கள்.

ஆடியன்ஸ் மட்டுமல்ல, போட்டியாளர்களே துவண்டு போனார்கள். இந்த நேரத்தில் பார்க்க ஐபிஎல் போட்டிக்கூட இல்லையே என்று ஆடியன்ஸ் முணுமுணுத்தது ஊருக்கே கேட்டது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அந்தப் போட்டி நேற்றோடு முடியவில்லையாம். இன்றும் தொடர்கிறதாம்.

ஷ்ஷ்ப்ப்பா…. இப்படிய்யா பொறுமையைச் சோதிப்பீங்க… முடியல – பிக்பாஸ் பரிதாபங்கள்

இந்த சீசன் போர் என்பதற்கு காரணம் போட்டியாளர்கள் மட்டுமல்ல, டாஸ்க் என்ற பெயரில் மொக்கை ஆட்டங்களை அனுப்பும் பிக்பாஸ் குழுவும்தான் காரணம். இறுதிப் போட்டி நெருங்கும்போதுகூட போர் அடித்தால் எப்படிதான் வியபாராம் செய்வீங்களோ?