95 சதவிகிதம் – இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம்

 

95 சதவிகிதம் – இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம்

கொரோனா பாதிப்பு அதிகம் அடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு கட்டத்தில் உலகளவில் ஒரே நாளில் அதிக புதிய நோயாளிகள் அதிகரிக்கும் நாடாக இந்தியா இருந்தது. அமெரிக்காவை விடவும் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து விடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் இறங்கு முகமாக இருந்து வருகிறது.

95 சதவிகிதம் – இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம்

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2.14 இலட்சமாக (2,14,507) சரிந்தது. கடந்த 2020 ஜூன் 30-ஆம் தேதி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,15,125 ஆக இருந்தது. 197 நாட்களுக்குப் பிறகு தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கையில் 2,051 குறைந்துள்ளது. நாள் ஒன்றில் ஏற்படும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,000-க்கும் குறைவான புதிய பாதிப்புகள் (15,968) நாட்டில் பதிவாகியுள்ளன. மறுபுறம் இதே காலகட்டத்தில் 17,817 பேர் குணமடைந்துள்ளனர்.

95 சதவிகிதம் – இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம்

நாட்டில் இதுவரை மொத்தம் 1,01,29,111 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் வீதம் 95.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 4,270 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றால் இந்தியாவில் மொத்தம் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

95 சதவிகிதம் – இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம்

இந்தியாவில் மாநிலங்களின் அடிப்படையில் தினந்தோறும் கொரோனா நிலவரத்தைப் பார்க்க்கையில் நோயாளிகள் குணமடையும் பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பில் ஆறாம் இடத்திலும் இருக்கிறது. இரண்டு பட்டியலிலும் முதல் இடத்தில் கேரளாவும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும் இருக்கின்றன.