Home சினிமா ’பிக்பாஸ் வீட்டில் 71 வது கேமரா ஆரிதான்’ கலாய்க்கும் சோம்! பிக் பாஸ்

’பிக்பாஸ் வீட்டில் 71 வது கேமரா ஆரிதான்’ கலாய்க்கும் சோம்! பிக் பாஸ்

இன்னும் சில நாட்களே இருக்கின்றன பிக்பாஸ் முடிவடைய. அதற்கான இறுதி சுற்றுக்கு நுழையும் டாஸ்க்குகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இவற்றுள் நேற்றிய எப்பிசோட்டில் நடந்தது வித்தியாசமானது. அதுபற்றி கட்டுரையில் பார்ப்போம்.

காலையில் ‘ஆரம்பம்’ படத்திலிருந்து அஜித் பாடல் ஒலித்தது. இந்த சீசனில் அபூர்வமாகத்தான் அஜித் பாடல்கள் போடப்படுகின்றன. பாட்டு போடற தம்பி தளபதி ஆர்மி போல.

சோம் மற்றும் ரியோ இருவரும், ‘பாலா ரொம்ப நல்லவந்தான்… அந்த கோபம்தான் ஆகல’ என்று தில்லானா மோகனாம்பாள் பட வசனம் போல பேசிக்கொண்டிருந்தார்கள்.

சைக்கிள் டயர் போன்ற ஒரு வளையத்தைக் கொடுத்து அதில் பந்தைச் சுற்றும் டாஸ்க் கொடுத்தார் பிக்கி. அதையும் ஒரு ஸ்டூல் மேல் ஏறிநின்று சுற்ற வேண்டும். இறங்குவதற்கும் ஏறுவதற்கு சின்ன பலகை ஒன்று இருந்தது.

முதலில் விட்டது ஷிவானி, ஆரி, ரம்யா, கேபி, சோம் என வரிசையாக விட இறுதியில் பாலா மற்றும் ரியோவுக்கு இடையே கடும் போட்டி நடந்தது. ரியோவுக்கு வியர்த்து ஊற்றியது. வலிமையான உடல்வாகு என்பதால் பாலா இயல்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார். அநேகமாக பாலாதான் வெல்லுவார் என நினைத்தோம். பிக்கி ஒரு ட்விஸ்ட் வைத்தார். அந்த சின்ன பலகையில் ஏறியும் இறங்கிகொண்டே வளையத்தைச் சுற்றச் சொன்னார்.

அப்படியும் இருவரும் விடுவதாக இல்லை. பலகையில் பாதியில் நிற்கச் சொல்வது, மெதுவாக இறங்கி ஏறச் சொல்வது என பல வழிகளில் சோதித்தார். ஒரு கட்டத்தில் பாலா ஏறும்போது கால் ஸ்லிப்பாக பந்து கீழே விழுந்துவிட்டது. இறுதியாக ரியோ வென்றுவிட்டார்.

டாஸ்க் முடிந்து ரிலாக்ஸானதும் ஆரியிடம் ‘நீங்க இன்னும் கொஞ்ச நேரம் சுற்றியிருக்கலாம்’ என ஷிவானி சொல்லிட்டு இருந்தார். ஏனெனில், ஷிவானி விட்ட சில நொடிகளில் ஆரியும் விட்டிருந்தார்.

வெளியில பெய்யுது ரெயின்; நீ பேசினா எனக்கு பெயினு என அடுக்குமொழியை ஆரம்பித்து வைத்தார் ரம்யா. சோம் இன்னும் மொக்கையாகச் சொல்லிக்கொண்டிருக்க, பொறுக்க முடியாத பிக்பாஸ் தன் பங்குக்கு ஒரு மொக்கை ரைமிங்கை எடுத்து விட்டார். அவ்வளவுதான் ‘என்ன ஆனந்தம் அந்த கரடிக்கு’ என்பதுபோல ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமானார்கள்.

மூட்டை பூச்சியைக் கொல்லும் நவீன மிஷின் என்பதுபோல புது டாஸ்க் அறிவித்தார். அதாவது ஹவுஸ்மேட்ஸ் போட்டிருக்கும் முகமூடியைப் பற்றி மற்றவர்கள் சொல்ல வேண்டுமாம்.

இந்த அற்புதமான டாஸ்க்குக்கு யார் முதல் ஆளாக வருவார்? ஆமா, ஆரிதான். ஒவ்வொருவராக கிழித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் ஏற்கெனவே சொன்ன குறைகளைத்தான் கோனார் நோட்ஸ் போட்டு விளக்கிக்கொண்டிருந்தார். பாலா – ரம்யா – ரியோவுக்கு சூடான தோசைகள் தந்தார்.

சோம், கேபி, ஷிவானி எல்லாம் சமாளித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆரியைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ் சொன்னவற்றில் சில

’இந்த வீட்டில் 70 கேமரா இருக்கிறது என்றால் நீ 71 வது கேமரா’ என்று ஆரியைப் பார்த்து சொன்னார் சோம். (நீங்களா பேசறது எஜமான்?)

’மற்றவரின் குறையைச் சொல்லியே விளையாட வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களோடு இணக்கமாக பழகும் முறையை அளித்திருக்கலாம் – இது ரியோ

“மற்றவர்களைக் குறை சொல்லி தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்கிறார்” – இது பாலா

“வீட்டுக்குள் இருக்கும் ஒருவர், இன்னொருவரை இன்ஃப்ளியன்ஸ் செய்வதாகச் சொல்கிறார் ஆரி. ஆனால், இவர்தான் மற்றவர்களின் குறைகளை மட்டுமே எல்லா கேமரா வழியாகச் சொல்லி கோடிக்கணக்கான மக்களை இன்ஃப்ளியன்ஸ் செய்கிறார். பேக்கெஜ் – ஞாபம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஞாபம் என்றால் அதைச் சொல்லும் விதத்திலேயே தெரிந்துவிடும். ஆரி சொல்லும் தொனி பேக்கெஜ்தான்” அடித்து சொன்னது வேறு யார் ரம்யாதான்.

ரம்யாவைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ் திரும்ப திரும்ப சொன்ன ஒரு விஷயம் பாலாவின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வில்லை என்பதே. அதை பாலாவும் சொன்னதுதான் வேதனை.

பாலாவுக்கு அதிகம் சொல்லப்பட்ட குறை கோபத்தைக் குறைத்துக்கொள்ளச் சொன்னது.

இந்த டாஸ்க்கிலும் ஆடமாலே ஒருவர் வென்றார். ஆரி, பாலாவை கீழிறக்க வேண்டும் என முடிவுக்கட்டியதால் பொழுதுபோக்கும் சோம் பெயர் நாமினேஷனில் வரவே இல்லை.

முதல் இடத்தில் சோம், 2 – ஷிவானி, 3- கேபி, 4- ரம்யா, 5 – ரியோ, 6 – பாலா, 7 ஆரி என்பதாக முடிவடைந்தது. ஆரியின் தன்னம்பிக்கை உட்சபட்சத்தில் இருக்கிறது. எப்படியாக இருந்தாலும் ரசிகர்கள் ஓட்டுபோடுவார்கள் என்று நம்பிகிறார். டாஸ்க்குகளில் தீவிரம் காட்டுவது குறைந்துவிட்டது. குறை கண்டுபிடிக்கும் டாஸ்க்கில் தீவிரத்தை சிடி பறிப்பது, பந்து சுற்றுவதில் ஆரி காட்டவே இல்லை.

ஆனால், இவ்வளவு தன்னம்பிக்கையோடு இருந்தவர்கள் வீழ்ந்த கதையை பிக்பாஸ் வீட்டில் நாம் பார்த்திருக்கிறோம். சென்ற சீசனில் தர்ஷன். பார்க்கலாம் என்ன ஆகப்போகிறது என்று.

மாவட்ட செய்திகள்

Most Popular

எடப்பாடி ஒரு கில்லாடி… அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால்,...

தங்கம் விலை குறைந்துவிட்டது! பெட்ரோல் எப்போது குறையும்?

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.75 தான், ஆனால் அரசுக்கு மனமில்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா?! தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசு...
TopTamilNews