92-வது ஆஸ்கர் விருதுகள்: சிறந்த திரைப்படம் ‘பாராசைட்’…சிறந்த நடிகர் ஜாக்குயின் ஃபீனிக்ஸ் – முக்கிய விருதுகள் விபரம்!

 

92-வது ஆஸ்கர் விருதுகள்: சிறந்த திரைப்படம் ‘பாராசைட்’…சிறந்த நடிகர் ஜாக்குயின் ஃபீனிக்ஸ் – முக்கிய விருதுகள் விபரம்!

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட முக்கியமான விருது விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட முக்கியமான விருது விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளிலேயே மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள் ஆகும். 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக பாராசைட் திரைப்படம் 4 விருதுகளையும், சாம் மெண்டிஸ் இயக்கிய ‘1917’ திரைப்படம் 3 விருதுகளையும், போர்டு வி பெராரி, ஜோக்கர், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் ஆகிய மூன்று படங்களும் தலா 2 விருதுகளையும் வென்றன.ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த திரைப்படமாக தென்கொரிய பிளாக் காமெடி படமான பாராசைட் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் படத்தை இயக்கிய பான் ஜூங் ஹோ சிறந்த இயக்குநர் விருதை பெற்றார். ஜூடி படத்தில் நடித்த ரெனீ சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

க்வெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். அதேபோல மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்த லாரா டெர்ன் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். 1993-ஆம் ஆண்டு வெளியான ஜுராசிக் பார்க் படத்தில் நடித்ததன் மூலம் இவர் இந்திய ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகை ஆவார். டாய் ஸ்டோரி-4’ சிறந்த அனிமேஷன் திரைப்படமாக விருது வென்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் கேமராமேன் ரோஜர் டெக்கின்ஸ் பெற்றார். அதேபோல சிறந்த படத்தொகுப்புக்கான விருதை போர்டு வி பெராரிதிரைப்படமும், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவில் ‘1917’ திரைப்படமும் ஆஸ்கர் விருதுகளை வென்றன.