சுற்றுலா செல்ல இ-பாஸ்… 90% விண்ணப்பங்கள் தள்ளுபடி

 

சுற்றுலா செல்ல இ-பாஸ்… 90% விண்ணப்பங்கள் தள்ளுபடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகத் தான் அரசு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் ஊரடங்கினால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களோ, ஜாலியாக சுற்றுலா போக விரும்புகின்றனர். இதனால் அவர்கள் சுற்றுலா செல்ல இ -பாஸ் கேட்டு விண்ணப்பிக்க, 90 சதவிகித விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

சுற்றுலா செல்ல இ-பாஸ்… 90% விண்ணப்பங்கள் தள்ளுபடி

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் எடுத்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா செல்ல இ-பாஸ்… 90% விண்ணப்பங்கள் தள்ளுபடி

இ-பாஸ் எடுப்பதற்கான் அ அந்த இணையதளத்தில் மருத்துவம், துக்க நிகழ்வு மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான பதிவுகளும் முறையான ஆவணங்கள் இல்லாமல் வருவதால் அவற்றை பரிசீலிப்பதில் நேரம் வீணாகிப் போவதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நீலகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதிரதுல்லா, ‘’நீலகிரி வருவதற்கு இ பாஸ் கட்டாயம். இ- பாஸ்க்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிடும் மருத்துவ தேவைக்கான இடமும், மருத்துவமனையோ இந்த மாவட்டத்தில் இல்லை. அப்படி இருக்கும்போது, அனுமதி கிடைத்தால் சுற்றுலா போகலாம் என்ற அடிப்படையில் முறையான ஆவணம் இன்றி விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது. இதனால் இதுவரைக்கும் 90 சதவிகித விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன’’ என்று தெரிவிக்கிறார்.