“மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்” தேனியில் ட்ரெண்டாகும் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை!

“மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்” தேனியில் ட்ரெண்டாகும் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை!

தேனியில் திறக்கப்பட்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

90’ஸ் காலக்கட்டத்திலும் சரி, 2k காலகட்டத்திலும் சரி இருவேறு பரிமாணங்களையும் பார்த்தவர்கள் 90ஸ் கிட்ஸ் என கெத்தாக சொல்லலாம். பீட்ஸா, பர்கர், கேஎஃசி என மேற்கத்திய உணவுகளை ருசித்து வரும் 2k கிட்ஸ்களுக்கு 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் இருந்து உணவுகளை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு ரூபாய் இருந்தால் கூட பல உணவுகளை வாங்கி ருசித்து மகிழ்ந்த 90ஸ் கிட்ஸ்களின் உணவுப் பொருட்கள், தற்போது மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளன.

“மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்” தேனியில் ட்ரெண்டாகும் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை!

சென்னையில் தொடங்கப்பட்ட 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்று, மிகப்பிரபலமானதை தொடர்ந்து தற்போது தேனியிலும் இதே போன்ற கடை தொடங்கப்பட்டிருக்கிறது. தேனியில் வள்ளிக்கண்ணன் என்பவர் ஆரம்பித்த இந்த கடையில் பப்பர மிட்டாய், ஆரஞ்ச் மிட்டாய், புளிப்பு சாக்லேட், எள் உருண்டை, பேப்பர் தோசை, கமர்கட்டு, மம்மி டாடி, ஜெல்லி என 96 வகையான 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள் விற்கப்படுகிறதாம்.

“மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்” தேனியில் ட்ரெண்டாகும் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை!

இந்த கடை தற்போது தேனியில் இருக்கும் 90ஸ் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிகக் குறைந்த விலையில் பல பொருட்களை ருசித்த 90ஸ் கிட்ஸ் பலர், இந்த கடைக்கு வந்து இந்த மிட்டாய் இருக்கிறதா? அந்த மிட்டாய் இருக்கிறதா? என கேட்கிறார்களாம். அதே போல குழந்தை குட்டிகளுடன் இருக்கும் 90ஸ் கிட்ஸ், தங்களது பிள்ளைகளுக்கும் அந்த உணவு பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்கின்றார்களாம். தேனியில் இருக்கும் இந்த 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடையில் எல்லா பொருட்களும் ரூ.10க்கும் குறைவாகவே விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.