90+…மத்திய அரசுக்கு கனிமொழி எழுப்பும் கேள்வி

 

90+…மத்திய அரசுக்கு கனிமொழி எழுப்பும் கேள்வி

திருப்பூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார் கனிமொழி எம்.பி.

90+…மத்திய அரசுக்கு கனிமொழி எழுப்பும் கேள்வி

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியவர், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட, பொகளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 40 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவிநாசி சட்டமன்ற தொகுதி, அன்னூர் ஒன்றியத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் ரஜினி மக்கள் மன்றம் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 300 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், ‘’மாற்றத்திற்காக காத்திருக்கும் இவர்களுடன் இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

பிரச்சாரத்திற்கு இடையேயும், ’’பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே சென்ற ஆண்டின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்துவரும் மக்களுக்கு இது மேலும் பெரும் சுமையாகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே உள்ள போதும், எரிபொருள்களுக்கு அதிக வரி விதிப்பதை மத்திய அரசு எப்போது மாற்றிக் கொள்ளும்?’’என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.