• February
    24
    Monday

Main Area

Main



90 சதவீத போலீசாருக்கு சட்டத்துக்கு புறம்பான மணல் மற்றும் கல் சுரங்க வர்த்தகத்தில் தொடர்பு..... மத்திய பிரதேச அமைச்சரின் பகீர் குற்றச்சாட்டு...

ம.பி. அமைச்சர் கோவிந்த் சிங்
ம.பி. அமைச்சர் கோவிந்த் சிங்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் கூட்டுறவு மற்றும் பொது நிர்வாக துறைகளின் அமைச்சராக இருப்பவர் கோவிந்த் சிங். அந்த மாநிலத்தில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் மணல் மற்றும் கல் சுரங்க வர்த்தகத்துக்கு  எதிரான முதல்வர் கமல்நாத் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கமல் நாத்

அமைச்சர் கோவிந்த் சிங் இது தொடர்பாக கூறியதாவது: மாநிலத்தில் உள்ள காவல்துறையில் 90 சதவீத பேரும், சுரங்க அதிகாரிகளில் 10 சதவீத பேரும் சட்டத்துக்கு புறம்பான மணல் மற்றும் கல் சுரங்க வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் இயற்கை வளத்தை கொள்ளையடிக்கின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில், பிந்தில் மட்டும் சுரங்க மாபியாக்களால் 5 முதல் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நடைபெறும் சட்டத்துக்கு புறம்பான சுரங்க வர்த்தகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு முதல்வர் கமல்நாத்திடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் மாபியா

காவல்துறை ஊழலில் திளைக்கிறது. சுரங்க மாபியாக்களிடமிருந்து ஒவ்வொரு காவல் நிலையமும் மாதந்தோறும் ரூ.60 லட்சம் வரை லஞ்சம் வாங்குகின்றன. மாநிலத்தில் சட்டத்துக்கு புறம்பான சுரங்க வர்த்தகத்துக்கு முடிவு கட்ட அரசு எந்தவிதமான கடுமையான முடிவுகள் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரே அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியிருப்பது முதல்வர் கமல் நாத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.