90% விசாரணை நிறைவு; விலகுமா ஜெயலலிதா மரணத்தின் மர்மம்?!

 

90% விசாரணை நிறைவு; விலகுமா ஜெயலலிதா மரணத்தின் மர்மம்?!

ஜெயலலிதா மரண வழக்கில் 90% விசாரணை முடிந்துவிட்டதாக ஆறுமுக சாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை ராணுவ கட்டுப்பாடுடன் வழிநடத்திச் சென்ற இரும்புப் பெண்மணி ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பான விசாரணையை நடத்த அப்போதைய அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது.

90% விசாரணை நிறைவு; விலகுமா ஜெயலலிதா மரணத்தின் மர்மம்?!

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் இருந்து ஜெயலலிதா மரணத்தின் இருக்கும் மர்மம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுவரை 11 முறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விசாரணை ஆணையம் தரப்பு வழக்கறிஞர், 90 சதவீத விசாரணை முடிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நடத்தப்பட்டது. அந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்று தெரிவித்தார். அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.