கொரோனாவுக்கு ஒரே நாளில் 90 பேர் மரணம் : முழு விவரம் இதோ!

 

கொரோனாவுக்கு ஒரே நாளில் 90 பேர் மரணம் : முழு விவரம் இதோ!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,649 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 90 பேர் உயிரிழந்ததாகவும் 9,489 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 1,09,16,589 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,55,732 ஆக உயர்ந்துள்ளதாகவும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,39,637 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 82,85,295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 90 பேர் மரணம் : முழு விவரம் இதோ!

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் வீரியம் குறைந்து, பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி பணியும் தீவிரமாக நடைபெறுவதால் விரைவில் கொரோனா இல்லாத நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று பதிவாகி இருக்கும் உயிரிழப்புகள் எண்ணிக்கை சற்று குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.