டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தை அச்சுறுத்தும் கொரோனா; பாதிப்பு அதிகரிப்பு!

 

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தை அச்சுறுத்தும் கொரோனா; பாதிப்பு அதிகரிப்பு!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி 2020 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளனர். வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள், பயிற்சியாளர்கள் என ஒலிம்பிக் கிராமமே விழாக் கோலமாக உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தை அச்சுறுத்தும் கொரோனா; பாதிப்பு அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டும் ஒலிம்பிக் கிராமத்தை கொரோனா வைரஸ் விடுவதாக இல்லை. போட்டிக்காக சென்றிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையில் முதல் முதலில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும் போட்டி அமைப்பு குழுவினருக்கு உறுதியானதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. ஒட்டுமொத்த வீர வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா ஊடுருவி அச்சத்தை ஏற்படுத்தியது.

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தை அச்சுறுத்தும் கொரோனா; பாதிப்பு அதிகரிப்பு!

இந்த நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஒட்டுமொத்தமாக 90 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 90 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மூலம் பிறருக்கு கொரனோ பரவாத வண்ணம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.