90 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ…. 450 கேள்விகளுக்கு பதில் சொன்ன ப.சிதம்பரம்…

 

90 மணி நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ…. 450 கேள்விகளுக்கு பதில் சொன்ன ப.சிதம்பரம்…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ. காவலில் இருந்த போது, அவரிடம் 90 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்டதாகவும், 450 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2007ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் முறைகேடாக அன்னிய நேரடி முதலீட்டை பெற உதவி செய்ததாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தித்தின் அனுமதியுடன் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

ப.சிதம்பரம்

கடந்த 2 வாரங்களாக சி.பி.ஐ.யின் காவலில் இருந்த ப.சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்ப நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. குறைந்தபட்சம் இம்மாதம் 19ம் தேதி விரை திஹார் சிறையில் தனது நாட்களை சிதம்பரம் கழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது தொடர்பாக சில பரபரப்பான தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

திஹார் சிறை வளாகம்

சுமார் 2 வாரங்கள் தங்களது கஸ்டடியில் இருந்த ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 90 மணி நேரம் கேள்விகளை கேட்டு துளையெடுத்துள்ளதாகவும், 450 கேள்விகளுக்கு சிதம்பரம் பதில் அளித்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் தொடர்பான கேள்விகளேயே சிதம்பரத்திடம் அதிகளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.