90 எம்.எல். சர்ச்சை: பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்: நடிகை ஓவியா பதிலடி!

 

90 எம்.எல். சர்ச்சை: பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்: நடிகை ஓவியா பதிலடி!

90 எம்.எல். பட டிரைலர்  குறித்து வெளியான சர்ச்சைக்கு நடிகை ஓவியா விளக்கமளித்துள்ளார்.

சென்னை: 90 எம்.எல். பட டிரைலர்  குறித்து வெளியான சர்ச்சைக்கு நடிகை ஓவியா விளக்கமளித்துள்ளார்.

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 90 எம்.எல். படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘A சான்றிதழ் வழங்கியுள்ளது.
அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலரை  18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு வெளியிட்டது.  இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து டிவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு வருத்தமாகவும் கோபமாகவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வைத் தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இதுபோன்ற மோசமான படங்கள் ஒழிய வேண்டும். இந்த டிரெய்லரை பார்த்து நான் மிகவும் வருத்தமடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஓவியா, ‘பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்’ என்று பதிலளித்துள்ளார்.