’90 எம்.எல் சர்ச்சை: உன்ன மாதிரி அசிங்கமான படத்தை நான் எடுக்கல: பிரபல தயாரிப்பாளர் – இயக்குநர் மோதல்!

 

’90 எம்.எல் சர்ச்சை: உன்ன மாதிரி அசிங்கமான படத்தை நான் எடுக்கல: பிரபல தயாரிப்பாளர் – இயக்குநர் மோதல்!

நடிகை ஓவியா 90 எம்.எல்.படத்தினால் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநர்  அனிதா உதீப்பும் மோதி கொண்டுள்ளனர்.

சென்னை: நடிகை ஓவியா 90 எம்.எல்.படத்தினால் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநர்  அனிதா உதீப்பும் மோதி கொண்டுள்ளனர்.

நடிகை ஓவியா  நடித்துள்ள 90 எம்.எல். படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குச் சிம்பு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது.  அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போதே  18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு டிரைலரை வெளியிட்டது.  

தற்போது வெளியாகியுள்ள இப்படத்தில்  இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ‘இயக்குநர் அனிதா உதீப் 90 எம்.எல் திரைப்படம் சமூகத்தில் சீரழிவை எப்படி ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் இருங்கள். பணத்திற்காக இளைஞர்களிடையே விஷத்தைப் பரப்பாதீர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு இயக்குநர் அனிதா உதீப்போ,  ‘அங்கிள். நான் சமூகத்துக்குத் தேவையான மிஸ்டர்.சந்திரமௌலி போன்ற படத்தை எடுத்து அதில் கில்மா பாடல்களை வைக்கவில்லை. 90 எம்.எல் வயது வந்தவர்களுக்கான படம். அது பொழுதுபோக்கிற்கான படம். நீங்கள் சேட்டையில் பேசியதைப் போல அசிங்கத்தைப் பற்றி பேசவில்லை. பெண்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்’ என்று பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து அனிதா உதீப்க்கு பதில் அளித்த தனஞ்ஜெயன், ‘அது எனக்கு புரிகிறது ஆண்ட்டி. பலரால் இந்தப் படம் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே அந்த வீடியோவை வலைப்பக்கத்தில் பகிர்ந்தேன். எங்கள் படங்களில் பெண்களை தரம் தாழ்த்துமாறு எந்த அசிங்கத்தையும் காட்டவில்லை. 90 எம்எல் படத்தில் வக்கிரமான வசனங்களும், காட்சிகளும் இழிவுதான் ‘ என குறிப்பிட்டுள்ளார். இப்படி இருவரும் டிவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

90 எம்,எல். திரைப்படத்தின் டிரைலர்  தனஞ்ஜெயன் விமர்சனம் செய்ததும் அதற்கு ஓவியா, ‘பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள்’ என்று பதிலளித்தார்.

ஆனால் தற்போது 90 எம் எல் படம் குறித்து திரைத்துறையினரே  மோதி கொள்வது கோலிவுட் வட்டாரத்தில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.