மூணாறு நிலச்சரிவில் 9 தமிழர்கள் மரணமா? கனமழையிலும் தொடரும் மீட்புப் பணி!

 

மூணாறு நிலச்சரிவில் 9 தமிழர்கள் மரணமா? கனமழையிலும் தொடரும் மீட்புப் பணி!

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை திடீரென இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 80 பேர் மாயமானதாக காலை தகவல் வெளியான நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் இதுவரை 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காணாமல் போன மக்கள், நிலச்சரிவில் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இடுக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூணாறு நிலச்சரிவில் 9 தமிழர்கள் மரணமா? கனமழையிலும் தொடரும் மீட்புப் பணி!

இதனை தொடர்ந்து, நிலச்சரிவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய விமானப்படை உதவியை நாடினார். ஆனால் தற்போது மழை பெய்து கொண்டே இருப்பதால் விமானப்படை மீட்புப்பணியில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே அங்கு 100 பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டிருப்பினும் தற்போது மேலும் 100 பேர் இடுக்கி மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர். தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் மொத்தமாக 20 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் மீட்புப்பணி தொடரும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 17 பேரில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. ராஜேஸ்வரி, கண்ணன், பாரதிராஜா, சிவகாமி, விஷால், ராமலட்சுமி, முருகன், மயில்சாமி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையிலும் இடுக்கியில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.