தமிழக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

 

தமிழக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

கடந்த 11ம் தேதி எம்.எல்.ஏக்களாக பதவியேற்க முடியாத சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், 31 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

தமிழக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காது 10 புதிய எம்எல்ஏக்களின் 9 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காத 6 திமுக, 4 அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் உள்ள நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் 9 பேருக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது. புதிய எம்எல்ஏக்கள் 9 பேருக்கும் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

புதிய எம்எல்ஏக்கள் 9 பேர் பதவி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க .ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக சார்பில் சிவசங்கர், மதி வேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாச்சலம் பதவியேற்றனர். அதிமுக சார்பில் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர் ,கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா பதவியேற்று கொண்டனர். கொரோனா உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களால் 11ஆம் தேதி பதவியேற்காத நிலையில் இன்று எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் திமுக எம்எல்ஏ சண்முகையா மட்டும் பதவி ஏற்கவில்லை.