தொழிலதிபரை கடத்தி பணம் பறிப்பு : இந்து மகாசபை பிரமுகர் உட்பட 9 பேர் கைது!

 

தொழிலதிபரை கடத்தி பணம் பறிப்பு : இந்து மகாசபை பிரமுகர் உட்பட 9 பேர் கைது!

ஈரோட்டில் தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் மோகன். பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாக கூறி இவரை ஏமாற்றிய ரஞ்சித்குமார் மற்றும் இந்து மகா சபை பிரமுகர் பிரேம் ஆகியோர், ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் கூறியதை நம்பி, மோகனும் தனது நண்பர் மற்றும் கார் டிரைவருடன் அவர்களுடன் சென்றுள்ளார்.

தொழிலதிபரை கடத்தி பணம் பறிப்பு : இந்து மகாசபை பிரமுகர் உட்பட 9 பேர் கைது!

அங்கு திடீரென போலீசார் உடை அணிந்து வந்த மர்ம கும்பல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட வந்ததால் கைது செய்திடுவோம் என்று மிரட்டி அவர்களை கடத்திச் சென்றுள்ளனர். சத்தியமங்கலத்தில் இருக்கும் தோட்டம் ஒன்றில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்து போன மோகன், தனது மனைவிக்கு அழைப்பு விடுத்து பணம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். அதன் படி, தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு மோகனின் மனைவி 3 தவணையாக ரூ.21 லட்சம் அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த போலீசார், மோகன் உள்ளிட்ட 3 பேரை காரில் கடத்திச் சென்ற நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 15 பேர் திட்டம் தீட்டி இந்த செயலில் ஈடுபட்டதும் 6 பேர் எஸ்கேப் ஆனதும் தெரிய வந்துள்ளது. இந்த கும்பல், தமிழகத்தை சேர்ந்த பல தொழிலதிபர்களிடம் விலையுயர்ந்த இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைதான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.