பா.ஜ.க-வுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்.எல்.ஏ-க்கள்! மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கிறதா காங்கிரஸ்?

 

பா.ஜ.க-வுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்.எல்.ஏ-க்கள்! மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கிறதா காங்கிரஸ்?

மணிப்பூரில் பா.ஜ.க-வுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருப்பதன் மூலம் பா.ஜ.க அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க-வுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்.எல்.ஏ-க்கள்! மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கிறதா காங்கிரஸ்?
மணிப்பூரில் 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், 28 எம்.எல்.ஏ-க்களை வென்று காங்கிரஸ் கட்சி முதன்மை கட்சியாக இருந்தது. பா.ஜ.க-வுக்கு 21 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கிடைத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்வதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை உடைத்து, சுயேட்சை, உதிரி கட்சிகளின் ஆதரவைத் திரட்டி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதன் பிறகும் பா.ஜ.க தன்னுடைய கட்சியை உடைக்கும் வேலையைத் தொடர்ந்தது. ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்து அதிர்ச்சியளித்தனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த எம்.எல்.ஏ-க்கள் மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்துக்குள் செல்லக் கூடாது என்ற கடந்த 9ம் தேதி மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் துணை முதல்வரும் நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவருமான ஜோய்குமார் சிங் உள்ளிட்ட நான்கு பேர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோபிந்த்ரோ சிங் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க-வுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளனர்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சுபாஷ்சந்திர் சிங், டி.டி.ஹாயோகிக், சாமுவேல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா, சட்டப்பேரவைக்குள் செல்ல தடை போன்ற காரணங்களால் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதனால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.