• February
    28
    Friday

Main Area

Main



பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது – இந்தோனேசியாவில் 9 பேர் உயிரிழப்பு

indonesia / ttn
indonesia / ttn

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் புதிய பாலம் ஒன்று இடிந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஆற்றை கடக்க புதிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த பாலத்தில் சுமார் 30 பேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென அந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். ஆனால் ,மாணவர்கள் சிலரால் தங்களை காத்துக் கொள்ள முடியவில்லை. ஆற்று நீர் அவர்களை அடித்துச் சென்றது.

இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ஆற்றில் விழுந்தவர்களில் 20 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரைக் காணவில்லை. அவரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.