தமிழகத்தில் நாளை முதல் அசைவச் சாப்பாட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் நாளை முதல் அசைவச் சாப்பாட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை

ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் பொறியல், மீன் குழம்பு, நண்டு வறுவல், காடைப் பொறியல்,அவித்தமுட்டை, ஆம்லெட், ஆப்பாயில் என அசைவச் சாப்பாடு என்பது தமிழர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த வகைச் சாப்பாடு என்றால் வழக்கத்தை விட கூடுதலாக ஒரு தட்டு சாப்பிடுவார்கள். அதிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் வெளுத்துக் கட்டுவார்கள். பொதுவாக தமிழர்களின்

தமிழகத்தில் நாளை முதல் அசைவச் சாப்பாட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை

வீடுகளில் சனி மற்றும் ஞயிற்றுக் கிழமைகளில் ஆட்டுக்கறி ,கோழிக்கறி, மீன் பொறியல் என ஏதாவது அசைவச் சாப்பாடு கம,கமக்கும்.
அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் நாளை 17-ம் தேதி சனிக்கிழமை முதல் 25-ம் தேதி ஞயிற்றுக் கிழமை வரை 9 நாட்களுக்கு அசைவச் சாப்பாட்டிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை அறிவித்திருப்பது அரசாங்கமோ அல்லது ஆட்டுக்கறி கடைக்காரர்கள் சங்கமோ அல்ல.. தமிழகத்துப் பெண்கள்தான். காரணம் நாளை 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 9

தமிழகத்தில் நாளை முதல் அசைவச் சாப்பாட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை

நாட்களுக்கு ”நவராத்திரி” விழா கொண்டாடப்படுகிறது.
”நவராத்திரி” என்பது பெண்களின் சக்தியைப் போற்றும் நிகழ்வாகும். சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி அது நவராத்திரி.

தமிழகத்தில் நாளை முதல் அசைவச் சாப்பாட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை

ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். எண்ணங்களும் செயல்களும் வாழ்க்கையும் சிறப்பாகும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் நாளை முதல் அசைவச் சாப்பாட்டிற்கு 9 நாட்கள் விடுமுறை

இதன் அடிப்படையில் தமிழகத்து பெண்கள் மிக சுத்தமான விரத முறைகளைக் கடைப்பிடிப்பார்கள்.அதன்படி அசைவத்திற்கு எந்த வகையிலும் அனுமதி கிடையாது.சாம்பார்,ரசம்,பொறியல்,கூட்டு வகைள்தான்.ஆசையாய் சாப்பிட அடிசனலாக அப்பளம் வேண்டுமானல் வழங்கப்படும். இது தவிர அம்பாளுக்கு படைத்த பிரசாதம் கிடைக்கும்.