சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 9 பேர் பலி!- விவரத்தை சேகரிக்கும் மாநகராட்சி

 

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 9 பேர் பலி!- விவரத்தை சேகரிக்கும் மாநகராட்சி

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 9 பேர் பலி!- விவரத்தை சேகரிக்கும் மாநகராட்சி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுடன், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர். இதில் பல தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களாக இருப்பதால் அவர்களை கணக்கில் சேர்க்கவில்லை என்றும் மாநகராட்சி ஊழியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த செய்தி தீயாய் பரவியதால் சென்னை மாநகராட்சியில் எத்தனை பணியாளர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அதில் பணியாளர் எண், பதவி, துறை, வயது, பாலினம், ஆய்வகத்தின் பெயர், தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் , சிகிச்சை பெற்றுவரும் மருந்துவனை உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 9 பேர் பலி!- விவரத்தை சேகரிக்கும் மாநகராட்சி

இதையடுத்து, அனைத்து மண்டல அலுவலர்களும் தகவல்களை சேகரித்து மாநகராட்சிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அறிவித்த படி நிவாரணம் வழங்கி வருகிறார். ஆனால், தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் இறந்ததுகூட தெரியாமல் தற்போது, செய்தி பரவிய பின்பு கணக்கெடுப்பை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.