கொரோனா பீதியின்றி வெளியே சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள்; இதுவரை 9.66 லட்சம் பேர் கைது!

 

கொரோனா பீதியின்றி வெளியே சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள்; இதுவரை  9.66 லட்சம் பேர் கைது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவில் இருந்து மக்களை தங்களை காத்துக் கொள்ள பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு விதிகளை மீறி மக்கள் வாகனங்களில் வெளியே சுற்றித்திரிகின்றனர். அதனால் அவர்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதே போல, உரிய இபாஸ் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பீதியின்றி வெளியே சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள்; இதுவரை  9.66 லட்சம் பேர் கைது!

இந்த நிலையில் பொதுமுடக்க விதிமீறல் அபராதம் ரூ.20.56 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 6.80 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 8.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.