9 ஆண்களுக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள்: ஒரே குடும்பத்தினருக்கு ஏன் இந்த தண்டனை?

 

9 ஆண்களுக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள்: ஒரே குடும்பத்தினருக்கு ஏன் இந்த தண்டனை?

ஒன்பது ஆண்கள் தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டையையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது பீகார் நீதிமன்றம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

9 ஆண்களுக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள்: ஒரே குடும்பத்தினருக்கு ஏன் இந்த தண்டனை?

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்சில் கடந்த 2016ம் ஆண்டில் மகாவிர் அகாரா மேளா நடந்தபோது, சாராயம் குடித்த 19 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேருக்கு கண் பார்வை நிரந்தரமாக பறிபோனது.நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், சாராயம் காய்ச்சிய குடும்பத்தினர் 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஆயிரம் லிட்டர் ஸ்பிரிட்டினை போலீசார் கைது செய்தனர். அந்த ஸ்பிரிட் மெத்தனால் என்றும், அதை மனிதர்கள் நுகர்ந்தால் விஷம் என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 2 பேர் பேர் இறந்துவிட்டனர். அதனால், கலால் சட்டம் 2016ன் கீழ் 13 பேருக்கும் தீர்ப்பளித்தார்.

நாகினா பாசி, சட்டு பாசி, ராஜேஷ்பாசி, சட்டு பாசி, கனஹையா பாசி, லல்பாபு பாசி, சஞ்சய் சவுத்ரி, சனோஜ் பாசி, ரஞ்சய் சவுத்ரி, முன்னா சவுத்ரி ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், இந்து தேவி, கைலாஷோ தேவி, ரீட்டா தேவி, லால்கரி தேவி ஆகிய நான்கு பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தூக்கு மற்றும் ஆயுள் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்று அதிகாரிகளே ஆச்சரியமாக சொல்லி வருகின்றனர்.