9 மாவட்டங்களில் தேர்தலை நிறுத்திய சுப்ரீம்கோர்ட் ! மனுக்கள் பெறவேண்டாம் என உத்தரவு ! வேட்பாளர்கள் சோகம் !

9 மாவட்டங்களில் தேர்தலை நிறுத்திய சுப்ரீம்கோர்ட் ! மனுக்கள் பெறவேண்டாம் என உத்தரவு ! வேட்பாளர்கள் சோகம் !

மறு அறிவிப்பு வரும் வரை புதிதாக பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது !

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 

மறு அறிவிப்பு வரும் வரை புதிதாக பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது !

election

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 
இநநிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முழுமை அடையாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என திமுக உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் வாதிடப்ப்டடது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் எழுப்பிய வாதத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என கூறியது.

election

இதையடுத்து பிரிக்கப்ப்டட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் மட்டும் அடுத்த 4 மாதத்திற்கள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை 9 மாவட்டங்களில் மட்டும்  உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது.