Home சினிமா '9 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா?' சின்மயி கடும் தாக்கு!

‘9 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா?’ சின்மயி கடும் தாக்கு!

உலகம் முழுவதும் பயணம் செய்தார், அரசியல் மற்றும் கலைகளில் பெரியவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பாடகி சின்மயி குற்றச்சாட்டியதையடுத்து  தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் கொடுமை குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன்   திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார்.இதை கண்டு ஆத்திரமடைந்த  சின்மயி, ‘ஒருவன் மீது பாலியல் புகார் விழுந்தால் அவனால் வெளியில் தலைகாட்ட முடியாது. யாரையும் எதிர்கொள்ள முடியாது. ஆனால்  வைரமுத்து இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனால்  பாதிப்புக்குள்ளான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் திரையுலகில் உள்ள பெரியவர்களால் எனக்கு கொடுக்கப்பட்ட நீதி’ என்று சாடினார். 

ttn

இந்நிலையில்  எஸ்ஆர்எம்  பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கி கௌரவிக்க உள்ளது. நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு  டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார்.

இதுகுறித்து சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில்,’அவரது மொழி புலமைக்காக தான் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆம், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்குப் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். மீண்டும் நான் வலியுறுத்துவது – வெளியில் தெரிந்தாலும்  துன்புறுத்துபவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அதற்கு பதிலாக எனக்கு தடைவிதிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ‘இந்த ஒரு வருடம், திரு. வைரமுத்து அருமையான மல்டி ஸ்டார் படங்களில் பணியாற்றியுள்ளார். உலகம் முழுவதும் பயணம் செய்தார், அரசியல் மற்றும் கலைகளில் பெரியவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.

புகாரை விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை;நல்ல நாடு, நல்ல மனிதர்கள்’  என்றும் வெல்டன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமே, உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கிறீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார். 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

“பட்ட பகலில் வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை

ஒரு எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியை ஒரு 19 வயது வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது...

ஜெயிச்சு தோற்ற ரம்யா… நீள வசனம் ஆரி… விட்டுக்கொடுத்த கேபி! – பிக்பாஸ் 52-ம் நாள்

எப்பாவாச்சும் நல்ல கண்டண்ட் கிடைக்கும் ஒரு டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக்பாஸ். அதுல இந்த கால் செண்டர் டாஸ்க்கும் ஒண்ணு. ஆனா, அதைப் பரபரன்னு கொடுக்கணும்னு நினைக்காம, சீரியல் கணக்கா இழுத்தடிக்க...

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உறவு கொண்ட காதலனின் கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த காதலி...

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்
Do NOT follow this link or you will be banned from the site!