9வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பன்னீர்செல்வம்!

9வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பன்னீர்செல்வம்!

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். எனவே, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக, பல்வேறு அறிவிப்புகள் உள்ள பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. 9வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். எனவே, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக, பல்வேறு அறிவிப்புகள் உள்ள பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tn-budget

இந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மகிழ்விக்கும் திட்டங்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள்தான் தேர்தல் நடைபெறும் வாக்குப் பதிவு மையங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களை மகிழ்ச்சிக்கும் அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய தாலுக்காக்கள் பிரிப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
2019-20 பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக இருந்தது. நிதிநிலை பற்றாக்குறையை படிப்படியாக குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது. கடன்சுமை 3 புள்ளி 97 லட்சம் கோடி என்றும் அந்த பட்ஜெட்டில் கணக்கிடப்பட்டிருந்தது. மத்திய அரசு தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை சரியாக அளிக்காதது, ஜி.எஸ்.டி-யில் தமிழக பங்கை அளிக்காதது உள்ளிட்டவற்றால் தமிழக நிதி நிலை மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார நிபுணர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.