8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்

8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்

உலக நாடுகளுமே கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களிடம் செலுத்தும் சூழல் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மற்ற நாடுகள் எப்படி கொரோனாவிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வது என கைகளைப் பிசைந்துகொண்டு திணறிகின்றனர்.

8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்

இந்தியாவும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடே. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,32,002-ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 26,382 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 33,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொவிட் சிகிச்சை பெறுபவர்களில் 7,818 பேர் குறைந்துள்ளனர். நாட்டில் கடந்த 17 நாட்களாக, தினசரி பாதிப்பு 40,000-க்கும் குறைவாக உள்ளது.

8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்

குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 94.5 லட்சத்தைக் (94,56,449) கடந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 95.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.

8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்

இந்திய மாநிலங்களில் தினசரி கொரோனா அப்டேட் பட்டியலில் புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு எட்டாம் இடத்திலும், மரண எண்ணிக்கை மற்றும் நோயாளிகள் குணமடைவதில் உள்ள பட்டியலில் முதல் பத்து இடத்தில் இல்லை.