”ரூ. 899க்கு 10,000 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க்”-சியோமி அறிமுகம்

 

”ரூ. 899க்கு 10,000 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க்”-சியோமி அறிமுகம்

899 ரூபாய்க்கு 10,000 எம்ஏஎச் பேக்கப் திறன் கொண்ட புதிய பாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்கை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

எம்ஐ பவர் பேங்க் 3ஐ என்ற பெயரில் இரண்டு வகைகளில் இந்த பவர்பேங்க் அறிமுகமாகி உள்ளது. இதில் 10,000 எம்ஏஎச் கொண்ட பவர்பேங்க், ஒரு டைப் சி போர்ட் மற்றும் ஒரு மைக்ரோ – யுஎஸ்பி போர்ட் வசதியுடன் 899 ரூபாய்க்கு வெளிவந்துள்ளது. 20,000 எம்ஏஎச் பேக்அப் கொள்ளளவு திறன் கொண்ட மற்றுமொரு பவர் பேங்க், 1499 ரூபாய்க்கு அறிமுகமாகி உள்ளது.

”ரூ. 899க்கு 10,000 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க்”-சியோமி அறிமுகம்

இவை இரண்டும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது என்றும் இதில் டூவே ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பவர் பேங்கை பாஸ்ட் ஆக சார்ஜ் செய்துகொள்ளும் அதே நேரத்தில், இதில் செல்போனையும் ஃபாஸ்ட் ஆக சார்ஜ் செய்யலாம் என சியோமி தெரிவித்துள்ளது.

கருப்பு மற்றும் நீலம் ஆகிய இருவிதமான வண்ணங்களில் கிடைக்கும் இந்த பவர் பேங்க், அமேசான் மற்றும் எம்ஐ ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்