87+8=105 பழைய கணக்கு! 2500+1500=5000 ஸ்டாலின் புதுக்கணக்கு – அதிமுக விமர்சனம் !

 

87+8=105 பழைய கணக்கு! 2500+1500=5000 ஸ்டாலின் புதுக்கணக்கு – அதிமுக விமர்சனம் !

பொங்கலுக்காக 2,500 ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார்கள். நான் அதை வரவேற்கிறேன். 5 ஆயிரத்திற்கு இன்னும் எவ்வளவு இருக்கிறது… ஆயிரத்து 500 ரூபாயா..அதையும் சேர்த்து கொடுத்தால் என்ன? என்று கிராம சபை கூட்டத்தில் தவறான கணக்கை ஸ்டாலின் சொல்வதுபோல கடந்த வாரத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

87+8=105 பழைய கணக்கு! 2500+1500=5000 ஸ்டாலின் புதுக்கணக்கு – அதிமுக விமர்சனம் !

இது தொடர்பாக விமர்சனம் செய்துள்ள நமது அம்மா நாளிதழ், ”கேள்வி கேட்பதற்கு என்று செட்டப் செய்யப்பட்ட ஆட்களை ஏற்பாடு செய்து அவர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு துண்டுச்சீட்டு துணையோடு பதில் அளிப்பதற்கான ஏற்பாடுகளுடன் மு. க. ஸ்டாலின் நடத்தி வரும் காமெடிகளை கண்டு நாடே விலா எலும்பு நோக விழுந்து விழுந்து சிரிக்கிறது என கூறியுள்ளது.

ஏற்கெனவே 87ம் 8ம் 105 என்கிற கணக்கை சொன்ன ஸ்டாலின், இப்போது 2,500ம் ஆயிரத்து 500ம் சேர்த்து 5000 என்கிற புதுக்கணக்கை எடுத்துவிட்டு புல்லரிக்க வைத்திருக்கிறார். தொண்டாமுத்தூரில் பெண் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க துப்பில்லாமல் அந்த பெண்ணை அடாவடியாக கூட்டத்தில் இருந்து வெளியேற்றியது, தன் கட்சி குண்டர்களை ஏவி விட்டு அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்த வைப்பது என தலைவருக்கு அழகில்லாமல் நடந்து கொள்வதாக விமர்சனம் செய்துள்ளது.

தொண்டாமுத்தூரில் கேள்வி கேட்ட பெண்ணை, நீ வேலுமணியால் அனுப்பப்பட்ட பெண் என்று திருவாளர் ஸ்டாலின் தன் கோமாளித்தனத்தை குற்றச்சாட்டினால் மறைக்க பார்த்திருக்கிறார். புத்திசாலித்தனமான கேள்விகளை எழுப்பும் அந்த பெண்ணை, நீ உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியால் அனுப்பப்பட்டவர் ஆகத்தான் இருக்க முடியும் என்று சொன்னதன் மூலம் அதிமுக ஒரு அறிவுசார் இயக்கம் என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதைக் எடுத்துக்காட்டுகிறது.

87+8=105 பழைய கணக்கு! 2500+1500=5000 ஸ்டாலின் புதுக்கணக்கு – அதிமுக விமர்சனம் !

கிராம சபை கூட்டம் என்று திரைக்கதை எழுதப்பட்ட நாடகத்தில் நடிக்கப் போன ஸ்டாலின், குறைந்த பட்சம் தான் உட்கார்ந்திருக்கிற கிராமத்தின் பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து கேள்வி கேட்கும் பெண்ணிடம் நீங்கள் எந்த ஊர் என்று வினா எழுப்பினால், முகத்திலே கரி பூசும் பதில் எதிரில் இருந்து கிளம்பும் தானே?

போகிற இடம் எல்லாம், தனது அறியாமையால் உலகத்தையே சிரிக்க வைக்கும் திருவாளர் ஸ்டாலின் கிராமசபை என்பதை பெயர் மாற்றி விட்டு ஒரு கோமாளி கூத்து சபை என புதுப்பெயர் சூட்டிக் கொண்டால் நன்றாக இருக்குமே’’ என்று அதிமுக சார்பான நமது அம்மா பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது.

ஆனால், அந்த வீடியோ வெளியான உடன் திமுக வெளியிட்ட விளக்கத்தில், மு.க.ஸ்டாலின் தவறான கணக்கை சொல்லவில்லை. ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. தற்போது பொங்கலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கிறார்கள். நான் ஏற்கெனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வலியுறுத்து வருகிறேன். எனவே இன்னும் ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும் என்று கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன், அது தொடர்பான முழுமையான வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.