ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 875 பேர் மீது வழக்குப்பதிவு; ரூ.4.34 லட்சம் அபராதம் வசூல்!

 

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 875 பேர் மீது வழக்குப்பதிவு; ரூ.4.34 லட்சம் அபராதம் வசூல்!

ஈரோடு

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 875 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.4.34 லட்சம் அபராதம் வசூலித்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊரடங்கின் 14-வது நாளான நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மட்டும் முகக் கவசம் அணியாமல் வந்த 334 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுட்டது.

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 875 பேர் மீது வழக்குப்பதிவு; ரூ.4.34 லட்சம் அபராதம் வசூல்!

மேலும், ஊரடங்கை மீறி சுற்றியதாக 875 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 840 இருசக்கர வாகனங்களும், 17 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நேற்று மட்டும் ரூ.4.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், நேற்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தளர்வு உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மாவட்டத்தில் நேற்று வழக்கத்தை விட வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகரித்து காணப்பட்டனர். சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இ-பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.