87 வயது மாமியாரைக் கையில் சுமந்து வந்து ஓட்டுப் போட வைத்த மருமகள்.. நெகிழ்ச்சி சம்பவம் !

 

87 வயது மாமியாரைக் கையில் சுமந்து வந்து ஓட்டுப் போட வைத்த மருமகள்.. நெகிழ்ச்சி சம்பவம் !

பூந்தமல்லியில் 87 வயதான மாமியாரைக் கையில் சுமந்து வந்து மருமகள் வாக்களிக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணிக்கும் மேலாக நடைபெற்றது. வெளியூரில் தங்கி பணிபுரியும் நபர்களும், சொந்த ஊர்களுக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையைச் சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக, பல முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், பூந்தமல்லியில் 87 வயதான மாமியாரைக் கையில் சுமந்து வந்து மருமகள் வாக்களிக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

TTN

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மூதாட்டிக்கு 87 வயது. இவரது மருமகள் பெயர் பாண்டியம்மா. வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாத பாப்பம்மாள் ஓட்டு போட வேண்டும் என்று மருமகளிடம் கூறியுள்ளார்.

TTN

பார்வை சரியாக தெரியாமல் எப்படிச் செல்வீர்கள் என்று மருமகள் கேட்டதற்கு பாப்பம்மாள் வாக்களித்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அவரது மருமகள் அவரை ஆட்டோ வைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்துள்ளார். வாக்குச்சாவடியின் வாசலிலிருந்து உள்ளே செல்ல வீல் சேர் வசதி ஏதும் இல்லாததால், அவரது மருமகளே பாப்பம்மாளை கையில் வந்து சென்று வாக்களிக்க வைத்தார். இதனைக் கண்ட பொதுமக்களும், காவல்துறையினரும் நெகிழ்ச்சி  அடைந்தனர்.