பாமக -856; திமுக -1600: தொடர்கதையாகும்… தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை…

 

பாமக -856; திமுக -1600: தொடர்கதையாகும்… தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை…

சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நி்லையில் பாமகவினரை போராட்டம் நடத்தவிட்டு, பின்னர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 3 ஆயிரம் பாமகவினர் மீது (856 பேர் என்றும் தகவல்) தடையை மீறியதாக வழக்கு பதிவு செய்தது போலீஸ். அதே போலவே, நேற்று திமுக கூட்டணியினரை போராட்டம் நடத்தவிட்டு தடையை மீறிவிட்டதாக ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீஸ். தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையை கையில் எடுத்த போலீஸ், அதை தொடர்கதையாக்குவது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பாமக -856; திமுக -1600: தொடர்கதையாகும்… தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை…

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 23 நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை 1897ல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் உத்தரவு கடந்த மே மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

பாமக -856; திமுக -1600: தொடர்கதையாகும்… தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை…

ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வரும் 144 தடை உத்தரவு இம்மாதம் 31ம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தது காவல்துறை. ஆனாலும் தடையை மீறி நேற்று திமுக கூட்டணியினர் போராட்டம் நடத்தினர்.

திட்டமிட்டவாறு திமுக கூட்டணியின் சார்பில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், தங்கபாலு, இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பாரிவேந்தர், வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றால், இரவு வள்ளுவர் கோட்டத்தில் 100 பேருக்கு மேல் கூடி நின்று உண்ணாவிரத போராட்டத்திற்கான பந்தல் அமைத்துக்கொண்டிருந்தார்கள்.

பாமக -856; திமுக -1600: தொடர்கதையாகும்… தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை…

போராட்டத்திற்கு தடை என்றால் பந்தல் அமைக்கும் போதே தடுத்திருக்கலாம். பல்லாரயிம் பேர் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் குவிந்தனர். போராட்டம் நடத்தவிட்டும் வேடிக்கை பார்த்துவிட்டு அப்புறமாக மாலையில், தடையை மீறிவிட்டதாக, 1600 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது நுங்கம்பாக்கம் போலீஸ்.

ஒன்று அனுமதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் முழுவதுமாக தடுத்துவிட்ட வேண்டும். இந்த தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை ஏன் தொடர்கதையாக இருக்கிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.