கேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- இருவர் கைது

கேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- இருவர் கைது

தேனி

சின்னமனூரில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- இருவர் கைது

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. கிலோ 30 ரூபாய் வரை விலைபோவதால், சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், உள்ளூர் காவல்துறையினரும் சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் சின்னமனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக வந்த பொலிரோ காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- இருவர் கைது

இதனையடுத்து, காரில் இருந்த 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக காரை ஓட்டிவந்த சின்னமனூரை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(36 மற்றும் கேரளாவை சேர்ந்த வர்கீஸ் ஆகியோரை பிடித்து, உத்தமபாளையம் புட் செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.