85 வயதில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி ! 6 விளையாதது 85ல் விளைந்த அதிசயம் !

 

85 வயதில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி ! 6 விளையாதது 85ல் விளைந்த அதிசயம் !

குழந்தை பருவத்தில் படிக்க நிறைய ஆசை இருந்ததாகவும் ஆனால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை

கேரளா மாநிலம் வயநாட்டில் தனது 85வது வயதில் மூதாட்டி ஒருவர் கேரள மாநில எழுத்தறிவு மிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

கேரளாவின் வயநாட்டின் பழங்குடி இனத்தை சேர்ந்த கெம்பி அரசு நிறுவனம் நடத்திய கல்வியறிவு தேர்வில் 2,993 பேருடன் தேர்வு எழுதிய மூதாட்டி தேர்ச்சி பெற்றுள்ளார்.

exam

குழந்தை பருவத்தில் படிக்க நிறைய ஆசை இருந்ததாகவும் ஆனால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை எனவும் தெரிவித்த மூதாட்டி சிறு வயது முதலே கூலித் தொழிலுக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார். ஆனாலும் படிப்பின் மீதான ஆர்வம் இன்றும் குறையவில்லை என தெரிவித்த மூதாட்டிக்கு பல வருடங்கள் கழித்து மீண்டும் படிக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய மகன்கள் கூலித் தொழில் செய்து வருவதாகவும் ஆனால் அவர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள் எனவும் தெரிவித்த மூதாட்டி வகுப்பில் கற்பிக்கப்பட்ட அனைத்தையும் திருத்த அவர்கள் எனக்கு உதவுவார்கள். என் வகுப்பு தோழர்களும் எனக்கு உதவுவார்கள். என கூறும் மூதாட்டி கெம்பி இப்போது கணினி செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ள தயார் ஆகிவிட்டார்.

கே.எஸ்.எல்.எம் ஏற்பாடு செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெற்ற பழங்குடியினத்தவரின் எண்ணிக்கை 7,302 ஆக உயர்ந்துள்ளது.