பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

 

பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

பீகாரில் இன்று பல்வேறு இடங்களில் இடி, மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இறப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது பற்றிய இதுவரை விவரங்கள் கிடைக்கவில்லை என பீகார அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் பலர் விவசாய வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட இடியில் சிக்கி வயல்களில் இறந்து கிடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.

பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

இடி, மின்னல் மற்றும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்தார். பருவமழை தொடங்குவதற்கு முன்பே இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் பீகாரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.பீகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் போது வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும், வெளியில் இருந்தால் மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.