83 படத்தின் புதிய போஸ்டர்…ஸ்ரீகாந்த் கேரக்டரில் அசத்தும் ஜீவா

 

83 படத்தின் புதிய போஸ்டர்…ஸ்ரீகாந்த் கேரக்டரில்  அசத்தும்  ஜீவா

 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக  பார்க்கப்படும் இந்த நிகழ்வு  83 என்ற பெயரில் படமாக உருவாகிறது.

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போது கபில் தேவ் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக  பார்க்கப்படும் இந்த நிகழ்வு  83 என்ற பெயரில் படமாக உருவாகிறது.

ttn

 கபீர் கான் இயக்கும் இப்படத்தில்  கபில் தேவ் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.அவரின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். 

இந்நிலையில் ஜீவாவின் ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி  கேரக்டரின்  புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது ‘83’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த படம் பல்வேறு மொழிகளில் வரும் ஏப்ரல்  10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.