Home சினிமா ‘83’ பாலிவுட் படம் ரூ.143 கோடிக்கு பிரபல ஸ்ட்ரீமிங் தளத்திற்கு விற்கப்பட்டதா?

‘83’ பாலிவுட் படம் ரூ.143 கோடிக்கு பிரபல ஸ்ட்ரீமிங் தளத்திற்கு விற்கப்பட்டதா?

பாலிவுட் திரைப்படமான ‘83’ ரூ.143 கோடி விலைக்கு பிரபல ஸ்ட்ரீமிங் தளத்திற்கு விற்கப்பட்டதா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மும்பை: பாலிவுட் திரைப்படமான ‘83’ ரூ.143 கோடி விலைக்கு பிரபல ஸ்ட்ரீமிங் தளத்திற்கு விற்கப்பட்டதா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் உலகக் கோப்பையை வென்றது பற்றி ‘83’ என்ற பாலிவுட் படம் உருவாகியுள்ளது. 83 திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் பிந்தைய தயாரிப்பு பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இப்படத்தை கபீர், மது மந்தேனா, விஷ்ணு இந்தூரி தயாரித்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது. 83 படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங்கும் மற்றும் தீபிகா படுகோனே, ஹார்டி சந்து, தாஹிர் ராஜ் பாசின், ஜீவா, சாகிப் சலீம், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 83 திரைப்படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தயாரிப்பாளர்கள் மார்ச் 20 அன்று அறிவித்தனர். கபீர் கான் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி திரைக்கு வெளியிடப்படவிருந்தது. இந்நிலையில், ஒரு பிரபல ஸ்ட்ரீமிங் இயங்குதளம் ‘83’ தயாரிப்பாளர்களுக்கு ரூ.143 கோடி கொடுத்து படத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

ttn

இதுகுறித்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிபாஷிஷ் சர்க்கார் கூறுகையில், இதில் எந்த உண்மையும் இல்லை. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம். அடுத்த சில மாதங்களுக்கு திரையரங்கு வெளியீட்டிற்காக நாங்கள் காத்திருக்க விரும்புகிறோம். முதலில் படத்தை முடிப்போம். பிறகு காத்திருப்போம். ஆனால் ஆறு அல்லது ஒன்பது மாதங்கள் என்றால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அந்த நேரத்தில் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு படத்தை விற்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம். தற்போது எந்த அவசரமும் இல்லை.

எல்லோரும் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் தற்போது டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக எந்த விவாதத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. மேலதிக அழைப்பை எடுப்பதற்கு முன் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நாங்கள் காத்திருப்போம்” என்றார். அஜய் தேவ்கன் மற்றும் சிங் ஆகியோரின் நீட்டிக்கப்பட்ட கேமியோக்களுடன் அக்‌ஷய் குமார் நடித்த இதே நிறுவனத்தின் மற்றொரு படம் சூரியவன்ஷியும் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படம் மார்ச் 24-ஆம் தேதி வெளியிடப்படவிருந்தது.

“சூரியவன்ஷி மற்றும் எங்கள் மற்ற படங்களுக்கும் இதே நிலைதான். முதலில் எங்கள் படங்களை முடிக்க முடிவு செய்துள்ளோம். இப்போது தயாரிப்புக்கான தேவை இருந்தால், மூன்று மாதங்களுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கும். ஊரடங்கு திறக்கப்படுவதற்கும் படத்தை முடிப்பதற்கும் நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு முன்னர் நாங்கள் எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடவில்லை” என்று சர்க்கார் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை

இயற்கை விவசாயத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதால், நாடு முழுவதும் பசு சாணத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை செய்துள்ளார். வேளாண்மை...

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களில் டெல்லிக்கு பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும்,...
TopTamilNews